Food

Madurai : Panaimarathu Briyani kadai Since 1925

மதுரை.  மதுரைனாலே சாப்பாடு தாங்க… தூங்காநகரம் அப்டின்னு சொல்றதுக்கு காரணம் எப்போவுமே சுறுசுறுப்பா  இருக்கிற எங்க ஊருக்காரைங்களும். எந்த நேரத்துலயும் கெடைக்கிற இந்த சாப்பாடும் தான்..

அப்படிப்பட்ட இந்த மதுரைல எக்கசக்கமா சாப்பாட்டு கடை இருக்கு. முனியாண்டி விலாஸ் ல இருந்து ஆரம்பிச்சு அம்மா மெஸ், குமார் மெஸ் தலப்பாக்கட்டி,அமீர் மஹால், அம்சவள்ளி, ஆறுமுகம் மெஸ் இப்படி சொல்லிட்டே போகலாம்..

ஆனா இனிக்கு நம்ம பாக்க போறது இந்த லிஸ்ட் ல இல்லாத ஒரு சாப்பாட்டு கடை. ஏன் இந்த லிஸ்ட் ல இந்த கடை இல்லைனா இப்படி ஒரு கடை இருக்குன்னே இங்க நெறையா பேருக்கு தெரியாது..

ஆனா இதோட சுவைக்குனு ஒரு தனி பேன்ஸ் இருக்காங்க..

அந்த கும்பல்ல நானும் ஒருத்தன்

அந்த கடை பிரியாணி டேஸ்ட்க்கு என் நாக்கு அடிமை..

என்னடா பில்ட்அப் கொஞ்சம் ஓவரா இருக்குனு பாக்குறிங்களா

ஆமா அதுதான் “பனைமரத்து பிரியாணி கடை”

1925 ல ஒரு பனைமரத்துக்கு கீழ இந்த கடை ஆரம்பிச்சு நடத்திட்டு இருந்ததால இந்த கடைக்கு இந்த பேர் வந்துச்சு.. அந்த காலத்துல இந்த கடைக்கு நல்ல மௌசு… கொஞ்சம் கொஞ்சமா மதுரை டெவலப் ஆகிருச்சு

நெறைய பனைமரங்க இருந்த எடத்துல இப்போ ஒரே ஒரு பனைமரந்தான் இருக்கு.. எல்லாமே மாறுனாலும் மாறாதது இந்த கடையோட டேஸ்ட்டு..

மதுரை திருமலை நாயக்கர் மஹால் பக்கத்துல இருக்கு இந்த பனைமரத்து பிரியாணி கடை.. ரொம்ப பெருசுலாம் இல்லைங்க.. மொத்தமா ஒரு 12 பேரு உக்காந்து சாப்டுற அளவுக்கு தான் இடம் இருக்கும் ஆனா ப்ரெண்ட்ஸ் கூட போனா ஜாலியா சாப்பிடலாம்.

நான் அந்த கடை இருக்குற ஏரியா பக்கத்துல ஒரு காலேஜ்ல தான் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தேன்.. சாரி சாரி இன்ஜினியரிங் படிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்.. அப்பபோ ஒருநாள் இந்த கடை பத்தி கேள்விபட்டேன் சரி லஞ்ச் அங்க சாப்டலாம் னு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம தான் நானும் என் ப்ரெண்ட்ஸ்ம் போனோம்..

ஏதோ ஒரு பழைய வீடு அதுக்குள்ள தான் கடை.. சரி [போவோம்னு உள்ள போயி உக்காந்து ஆர்டர் பண்ணினோம்.

எந்த ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் போதும் பிரியாணியோட ஆரம்பிக்கணும் நு முடிவு பண்ணி.. அண்ணே ஒரு மட்டன் பிரியாணி.. அப்புறம் இங்க என்னனே பேமஸ்னு\ கேக்க கிளி சீட்டு எடுத்து போடுற மாதிரி சர்வர் அண்ணே எடுத்து விட்டாரு… மட்டன் சுக்கா நல்ல இருக்கும் தம்பினு அவரே சொன்னாரு சரி ஒரு மட்டன் சுக்கா அப்புறம் எனக்கு பிடிச்ச செட்டிநாடு சிக்கன் கிரேவி..

அதன் பிறகு ஒரு அமைதி ஒரு காத்திருப்பு…

ஆஹா வந்துவிட்டால் வசந்தசேனைனு சொல்ற மாதிரி சுட சுட ஆவி பறக்க மட்டன் பிரியாணியும் மட்டன் சுக்காவும் செட்டிநாடு சிக்கனும் வரிசை வரிசையா வந்து சேர்ந்துச்சு

அந்த வாழை இலை போட்டு கொஞ்சம் கிரேவி ஊத்தி பிரியாணி கொஞ்சம் மட்டன் சுக்கா கொஞ்சம்னு அள்ளி வாய்ல வைக்கும் போது அந்த மனமும் சுவையும் அடடா அதை சொல்ல வார்த்தையே இல்ல..

மண்டைக்குள்ள ஏதோ ஒரு மூலைல இருந்து சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமானு இளையராஜா குரல் கேக்கும்..

அந்த அளவுக்கு இருந்துச்சு அந்த டேஸ்ட்…

மதுரைக்காரனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும் என்னதான் எவளோ ருசியா சாப்டாலும் அந்த பினிசிங் டச் கலக்கி இல்லைனா அவ்ளோதான் கொதிச்சிருவாங்க..

அண்ணே வெங்காயம் தூக்கலா ஒரு கலக்கி…

ரைட்டு சாப்டாச்சு கைய கலுவியாச்சு அடுத்து பில் வர்ற நேரம்

பில் யாரு குடுக்க போறதுன்னு ஒரு பக்கம் கவலை.. எவ்வளோ வர போகுதுன்னு மறு பக்கம் கவலை

பில்ல பாத்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சு

மொத்தமா நாலு பேருக்கு சேர்த்து  Rs.650 தான் வந்துச்சு

மதுரைல எப்போவுமே சாப்பாடு ரேட் கம்மிதான் ஆனா இது அத விட கம்மிதான்..மிடில் கிளாஸ் மக்களுக்கு எத்த ரேட்..

சந்தோசமா பில்ல கட்டிட்டு சர்வர் அண்ணனுக்கு Rs.50 சேர்த்து Rs.700 கொடுத்திட்டு. சந்தோசமா அங்க இருந்து கெளம்புனோம்…

ஆனா நேரா போனது காலேஜ்க்கு தான்… அதனால சந்தோஷம் அந்த கடை வாசல்லையே முடிஞ்சு போச்சு….

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top